பொது அறிவு - விதையை இழந்ததால் விவசாயத்துக்கு நெருக்கடி
தினம் ஒரு தகவல் விதையை இழந்ததால் விவசாயத்துக்கு நெருக்கடி விதை என்பது ஒரு உயிர்ப்பெட்டகம். மண்ணால் உயிர்ப்பெற்று வளரக்கூடியது. பஞ்சம் பாதித்த காலத்தில்கூட விதையை உண்ண மறுத்து, உயிர் துறந்தவர்கள் குறித்து நம் வரலாறு பதிவு செய்துள்ளது. அடுத்த தலைமுறைக்கு விதையை விட்டுச் செல்வதற்காக உயிர் நீத்த பரம்பரை நம்முடையது. இப்படி உயிரைத்துறந்து காப்பாற்றிய விதை களுக்கு எப்படி விலை நிர்ணயிக்க முடியும்? 10 ஆண்டுகளுக்கு முன்புவரை நம் ஊர் உழவர்கள் விளைவிக்கும் விதைக்கு விலை நிர்ணயிக்கப்படவில்லை. வியாபார பண்டமாக விதை இருக்கவில்லை. எல்லாவற்றையும் செழிப்புறச் செய்யும் வித் தையை கற்றிருந்த நம் பெண்களின் கைகளில் விதை பாதுகாக்கப் பட்டு, அடுத்தடுத்த பருவத்துக்காக சேமிக்கப்பட்டது. ஒருவருக்கு விதை தேவைப்பட்டால், அடுத்தவருக்கு பரிமாறிக் கொள்வதாக மட்டுமே அது இருந்தது. அப்படி இல்லாத நிலையில் ஒரு விதைக்கு மற்றொரு விதை பண்டமாற்றாகக் கொடுக்கப்பட்டது. பின்னாட்களில் விலை நிர்ண யிக்க வேண்டி வந்தபோதும்கூட, கொள்ளை லாப விலை நிர்ணயிக் கப்படாமல் நியாய விலையிலேயே விதை சந்தைப்படுத்தப்பட்டது. மேலை நாட்டின் நிறுவனங்கள் வி...