பொது அறிவு - விதையை இழந்ததால் விவசாயத்துக்கு நெருக்கடி

 தினம் ஒரு தகவல்

விதையை இழந்ததால் விவசாயத்துக்கு நெருக்கடி



விதை என்பது ஒரு உயிர்ப்பெட்டகம். மண்ணால் உயிர்ப்பெற்று வளரக்கூடியது.

பஞ்சம் பாதித்த காலத்தில்கூட விதையை உண்ண மறுத்து, உயிர் துறந்தவர்கள் குறித்து நம் வரலாறு பதிவு செய்துள்ளது. அடுத்த தலைமுறைக்கு விதையை விட்டுச் செல்வதற்காக உயிர் நீத்த பரம்பரை நம்முடையது. இப்படி உயிரைத்துறந்து காப்பாற்றிய விதை களுக்கு எப்படி விலை நிர்ணயிக்க முடியும்?


10 ஆண்டுகளுக்கு முன்புவரை நம் ஊர் உழவர்கள் விளைவிக்கும் விதைக்கு விலை நிர்ணயிக்கப்படவில்லை. வியாபார பண்டமாக விதை இருக்கவில்லை. எல்லாவற்றையும் செழிப்புறச் செய்யும் வித் தையை கற்றிருந்த நம் பெண்களின் கைகளில் விதை பாதுகாக்கப் பட்டு, அடுத்தடுத்த பருவத்துக்காக சேமிக்கப்பட்டது. ஒருவருக்கு விதை தேவைப்பட்டால், அடுத்தவருக்கு பரிமாறிக் கொள்வதாக மட்டுமே அது இருந்தது.


அப்படி இல்லாத நிலையில் ஒரு விதைக்கு மற்றொரு விதை பண்டமாற்றாகக் கொடுக்கப்பட்டது. பின்னாட்களில் விலை நிர்ண யிக்க வேண்டி வந்தபோதும்கூட, கொள்ளை லாப விலை நிர்ணயிக் கப்படாமல் நியாய விலையிலேயே விதை சந்தைப்படுத்தப்பட்டது.


மேலை நாட்டின் நிறுவனங்கள் விதையை விற்பதற்காக நம் நாட்டில் நுழைந்தபோது, மீண்டும் முளைக்காத, மீண்டும் பயன்படுத்த முடியாத சோதா விதைகளாக வந்தன. அதன் காரணமாக, மீண்டும் மீண்டும் தனியார் நிறுவனத்தை சார்ந்திருக்க வேண்டிய சந்தைப் பொருளாக விதை மாற்றப்பட்டது.


உழவனுக்கும் உணவுக்கும் ஆதாரமாக இருந்த விதை வியாபார மாக, பெரும் லாபம் அளிக்கும் விற்பனை பண்டமாக நம் மீது திணிக்கப்படுவதை இன்றைக்கு பார்க்கிறோம். இப்படி நம் விதை பறிபோவது சமீபத்திய விவகாரம் அல்ல. நமது மிகப்பெரிய சொத் தாகத் திகழ்ந்த பாரம்பரிய விதை வளம் அழிக்கப்பட்டு, சில நிறுவ னங்களின் விதை மட்டுமே சந்தையை ஆக்கிரமித்து இருக்கும் மோசமான நிலைக்கு நம்முடைய வேளாண்மை தள்ளப்பட்டுஉள்ளது.


காப்புரிமை என்ற பெயரில் நம் பாரம்பரிய பொருட்களான வேம்பு முதல்மஞ்சளின் பல்வேறுபட்ட பயன்பாடுகளை மொத்தமாக விழுங்க அநீதிகள் நடந்தன. மேலும் தாவர-உயிரினப் பன்மையை முற்றிலும் சீரழிக்கும் மரபணு மாற்று விதைகள் அறிமுகத்தால், நமது பாரம்பரிய விதைகள் மீதும், உழவர்கள் மீதும் நெருக்கடிகள் திணிக்கப்படு கின்றன, என்பதில் சந்தேகமில்லை. விதை என்றால் உயிர் வித்து, உயிர் காக்க உணவூட்டும் பொருள் என்பதெல்லாம் போய், வெறும்சந்தைப்பண்டமாகி விட்டது . இதனால் பேரிழப்பைச் சந்தித்த வர்கள் உழவர்கள் மட்டுமே. அதே போல் விவசாயமும் நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டது.

விதை என்பது உழவின் உயிரின் அடிப்படை. அதைநாம் இழந்தால் எல்லாவற்றையும் இழந்து விடுவோம் என்பதே உண்மை.

Comments